ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுத்த- அரசு ஊழியர்கள்..!!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக 150 கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
CBSE: cbse.gov.in தளத்தில்- மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு..!!
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்களின் நிதி நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்படும் செலவு காரணமாக நெருக்கடி உள்ளது.
எனவே பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்கு வழங்கி வருகின்றனர். சிஎஸ்கே அணியினர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் செறிவூட்டி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்கள் அமைப்பில் உள்ளவர்களின் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு தருவதாக கூறியுள்ளனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க...
கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை-அரசாணை வெளியீடு..!! https://www.tamilcrowd.in/2021/05/blog-post_27.html?m=1
எனவே ஆக்சிஜன், தடுப்பு மருந்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தங்கள் அமைப்பில் உள்ள 12 லட்சம் ஊழியர்களின் ஒரு நாள் சம்பள தொகையான 150 கோடி ரூபாய் தர முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
0 Comments