Join Our Whats app Group Click Below Image

கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..??

கொரோனா வந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி; 

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பின் எப்போது தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

 ரூ.30,000-50,000  சம்பளம் : IIT-ல்  வேலைவாய்ப்புகள் 2021..!! 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாகப் பரவி வருகிறது. ஆரம்பத்தில் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுப்பதற்குத் தயங்கி வந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வால் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர் குழுவிடம் பரிந்துரைகளை பெற்று மத்திய அரசு அவற்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

 ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட பின் மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.

 முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரும் பாதிப்பில் இருந்து மீண்டு மூன்று மாதங்கள் கடந்த பின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், பிளாஸ்மா தெரபி பெற்று கொரோனாவில் இருந்து மீண்ட வரும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சூழ்நிலைக்கான தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி 4 வாரங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தச் செய்திக் குறிப்பில், மருத்துவமனையில் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப் படுபவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான நோய் உள்ளவர்கள் சிகிச்சையை முடித்த பின்னர் தடுப்பூசிக்கு 4 - 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு நபர் கோவிட் - 19 தடுப்பூசி பெற்ற 14 நாள்களுக்குப் பிறகு அல்லது கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை பரிசோதித்து அது நெகட்டிவ் ரிசல்ட் காட்டும்பட்சதில் ரத்த தானம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

 Tamilnadu Post Office Circle Recruitment 2021 

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


Post a Comment

0 Comments