சபாநாயகர் வேட்பாளர் அப்பாவு : தி.மு.க., அறிவிப்பு..!!
தமிழக சட்டசபை சபாநாயகர் வேட்பாளராக அப்பாவு போட்டியிகிறார்.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க., சட்டசபை தலைவராக, ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.அவருடன் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த செய்தியையும் படிங்க...
"தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள்" - அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை..!!
இந்நிலையில் சட்டசபை சபாநாயகர் வேட்பாளராக ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு போட்டியிட உள்ளார். நான்காவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட அப்பாவு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், இம்முறை இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதையடுத்து அவர் சபாநாயகர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவார் என தி.மு.க., அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
குடும்பத்தில் யாரெல்லாம் ரேசன் கடையில் கொரோனா நிவாரண நிதியை பெறலாம்..??
0 Comments