கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? - புதிய பரிந்துரைகள்!!
கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்கு வசதியாக இம்காப்ஸ் நிறுவனம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை அறிவித்துள்ளது.
சித்த மருத்துவ மருந்துகள்:
கபசுர குடிநீர் சூரணம், ஆடாதோடை மணப்பாகு, 5 மி.லி., உணவுக்கு பின் பிரம்மானந்த பைரவம், 2 மாத்திரை, தாளிசாதி வடகம், 2 மாத்திரை, அமக்கரா சூரண, 2 மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவை காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
கரிசாலை நெய்-வழலை மருத்துவம் - தொண்டைக்கு தாளகச் செந்துாரம், 100 மி.கி., எமதண்டக் குளிகை, 2 மாத்திரை, வசந்த குசுமாகரம், 2 மாத்திரை, அஷ்ட பைரவம் மாத்திரை, 2 மாத்திரை ஆகியவை காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
இந்த செய்தியையும் படிங்க...
ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.!
ஆயுர்வேத மருந்துகள் :
தசமூல கடுத்ர்யாதி சூரணம், தசமூல கிவாத சூரணம் ஆகியவை, 5 கிராம் தண்ணீரில் காய்ச்சி குடிக்க வேண்டும். யஸ்டி சூரணம், 100 கிராம், அகஸ்திய ரசாயணம், சயவனப்ராச லேகியம், ஆகியவை ஐந்து கிராம், சுதர்சன சூரண மாத்திரை, 2, மகா சுதர்சன சூரண மாத்திரை, 2 சுவாசனந்தா குடிகா, 2 மாத்திரை ஆகியவை காலை மாலை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.
யுனானி மருந்துகள் :
சர்பத் சுவால், 5 மி.லி., தவா சிவா ஹாலக், 5 கிராம், லபூப் சசீர், 5 கிராம் ஆகியவை காலை மாலை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
சித்த மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளில், முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்காணி, துாதுவளை போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை காய்கறிகளில் கேரட், பப்பாளி, நெல்லிக்காய், கொய்யா, மஞ்சள், இஞ்சி, பூண்டு ஆகியவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இவற்றின் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆக்சிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.
வெள்ளை அணுக்களை அதிகரிக்க, மீன் - ஓமேகா -3 கொழுப்பு, பர்கோலி போன்றவற்றை உட்கொள்ளலாம். பிராணாயாமம் செய்வதன் மூலம் ஆக்சிஜன் பிரச்னை இருக்காது.
இந்த செய்தியையும் படிங்க...
மிளகை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!
இம்காப்ஸ் நிறுவனம் சென்னை, அடையாறு, எல்.பி., சாலையில், இயங்கி வருகிறது. கொரோனா தொற்று காலத்தில், இம்காப்ஸ் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து, மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.
0 Comments