அன்னாசிப் பழத்தின் அள்ள அள்ள குறையாத அற்புத நன்மைகள் இதோ!!
உடலுக்கு பல வித நன்மைகளை அள்ளித் தரும் பழ வகைகளில் அன்னாசிப்பழமும் ஒன்றாகும். அன்னாசிப்பழத்தில் அதிகப்படுயான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
அன்னாசிப்பழம் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பல பண்புகளும் இதில் உள்ளன. இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதெரோஸ்கிளெரோஸிஸ் எனப்படும் பெருந்தமனி தடிப்பு, இதய நோய்கள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க...
'AB' மற்றும் 'A' இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்.!!
ருசியும் ரசமும் நிறைந்த இந்த அன்னாசிப்பழத்தின் ஏராளமான நன்மைகளில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்:
- அன்னாசிப்பழத்தில் ( Pineapple) அதிகமான மாங்கனீசு இருப்பதால், வலுவான எலும்புகளின் உருவாக்கத்தில் இந்த பழம் உதவும். - அன்னாசிப்பழச்சாறு நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு பற்களை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளதால், இது மாகுலர் சிதைவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- அன்னாசிப்பழத்தில் அதிக நார்சத்தும் குறைந்த கலோரிகளும் உள்ளதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- அன்னாசிப்பழம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. கூந்தல், தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அன்னாசிப்பழம் வழங்குகிறது.
அன்னாசி பழத்தால் ஏற்படக்கூடும் பாதிப்புகள்:
- அன்னாசிப்பழத்தில் இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. ஆகையால், இது சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு நல்லதல்ல.
- அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோம்லைன் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேரும் போது தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இதை உட்கொள்ள வேண்டும்.
- முழுமையாக பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது அதை பழரசமாக குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
- அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை படியும். இது பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இந்த செய்தியையும் படிங்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி சூப் செய்வது எப்படி..?
0 Comments