அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்..!!
அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அரபிக்கடலில் மீன்பிடிக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் 14ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுத்த- அரசு ஊழியர்கள்..!!
மேலும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை, தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இந்த செய்தியையும் படிங்க...
இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா..?
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
0 Comments