தபால்துறை தேர்வுகள்-ஒத்திவைப்பு..!!
கொரோனா பரவலைத் தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் நடக்கவிருந்த, தபால்துறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.தபால் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணையை, கடந்த மார்ச் மாதம் தபால்துறை வெளியிட்டிருந்தது.
இதில், வரும் ஜூன் மாதம், சேமிப்பு வங்கி தேர்வு, ஜூனியர் அக்கவுன்டன்ட் தேர்வு மற்றும் போஸ்ட்மேன், மெயில் கார்டு, டிஸ்பேட்ரைடர், எம்.டி.எஸ்., ஜி.டி.எஸ்., போன்ற பணியாளர்களுக்கு, சார்ட்டிங் மற்றும் தபால் உதவியார் பதவி உயர்வுக்கான தேர்வுகள் நடப்பதாக இருந்தது.
இந்த செய்தியையும் படிங்க...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்(IOB)-வேலைவாய்ப்பு..!!
இந்நிலையில், வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தபால் வட்டங்கள் சார்பில், தலைமை தபால்துறைக்குவலியுறுத் தப்பட்டது. இதை தொடர்ந்து, போட்டித் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தபால்துறை தெரிவித்துள்ளது.
0 Comments