Join Our Whats app Group Click Below Image

உங்கள் உடலில் இந்த பாதிப்புகள் இருந்தால் உங்களுக்கு கொரோனோ பாசிட்டிவ் உறுதி.!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 உங்கள் உடலில் இந்த பாதிப்புகள் இருந்தால் உங்களுக்கு கொரோனோ பாசிட்டிவ் உறுதி.!

கொரோனோ பாதிப்பின் முக்கிய அறிகுறிகளை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் அதற்கான வழிமுறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது. இந்நிலையில் தொற்று பரலவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது போன்ற காலகட்டத்தில் கொரோனோவிற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மிகவும் பொதுவான அறிகுறிகள்:

  1. காய்ச்சல்
  2. வறட்டு இருமல்
  3. சோர்வு
  4. தொண்டை உலர்ந்து போகுதல்

நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்து ஏற்படும் அறிகுறிகள்:

  • குடைச்சலும் வலியும்
  • தொண்டை வலி
  • வயிற்றுப்போக்கு
  • வெண்படல
  • தலைவலி
  • சுவை அல்லது வாசனை இழப்பு
  • தோல் மீது சொறி, அல்லது விரல்கள் அல்லது கால்விரல்களின் நிறமாற்றம்

நோய் பாதிப்பின் தீவிர அறிகுறிகள்:

  • சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
  • மார்பு வலி அல்லது அழுத்தம்
  • பேச்சு திறன் அல்லது இயக்கத்தின் இழப்பு

தொற்று பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

  • தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • குடிநீர் போன்ற திரவங்களை நாள் தோறும் அதிக அளவில் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அதிக அளவிலான நீர் அருந்துவதன் மூலம் தொண்டை உலராமல் பாதுகாப்பதோடு நுரையீரலையும் சுத்தம் செய்ய உதவுகிறது.
  • நோயாளிகள் பாதிப்புகளை உணர தொடங்குவார்கள் சுவைப்பு, வாசனை இழப்பு அல்லது சுவை வாசனை இரண்டுமே தெரியாமல் போதல், லேசான செயல்களை செய்தால் சோர்வு ஏற்படுதல், மார்பக பகுதியில் வலி, நெஞ்சை அழுத்துவது போல உணர்தல், சிறுநீரகம் அமைந்துள்ள பகுதியில் வலி. 
  • மேலும் நோயாளிகளுக்கு 9வது நாள் முதல் பதிப்பின் மூன்றாவது கட்டம் தொடங்குகிறது குணமடைய தொடங்கும் 14-வது நாள் வரை கிடைக்கிறது எனவே எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்குகிறோம் அவ்வளவு விரைவாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Post a Comment

0 Comments