கரோனா தடுப்பு நடவடிக்கைகள்; முதல்வர் ஸ்டாலின் -முக்கிய ஆலோசனை..!!
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. தமிழகம் முழுதும் நேற்று (மே 15) மட்டும் 33,658 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகம் முழுதும் 303 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.
இந்த செய்தியையும் படிங்க...
கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? - புதிய பரிந்துரைகள்..!!
இதனிடையே, கடந்த 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இன்று (மே 16) சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டைப் போக்குவது, மருத்துவமனைகளில் சாதாரண படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, விரைவில் தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments