Join Our Whats app Group Click Below Image

இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் - இயற்கை மருத்துவ குறிப்புகள் என்னென்ன..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் - இயற்கை மருத்துவ குறிப்புகள்  என்னென்ன..!!

பெரியவர் முதல் சிறியவர் வரை சந்திக்க கூடிய பிரச்னைகளில் ஒன்றுதான் இருமல். இத்தகைய இருமலை கட்டுப்படுத்தக் கூடிய வீட்டு வைத்திய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

இந்த செய்தியையும் படிங்க...

வாழைத்தண்டு - மருந்தாக விளங்கும் நோய்கள் :என்னென்ன தெரியுமா..??  

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள்,

  1.  ஆவிபிடித்தல், 
  2. சுடு நீர் குளியல் 

போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்வதினால், இருமல் குறையும். மேலும், 

  • சுத்தமான குடிநீரை அடிக்கடி அருந்த வேண்டும்,
  •  இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, 
  • சளி போன்றவை சுத்தம் செய்யப்படும்.

சளி தொந்தரவின் போது ஏற்படும் 

  • நீர் வடிதல், 
  • மூக்கடைப்பு 

போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக எடுத்து கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை போட்டுக்கொள்ளலாம். 

மூக்கில் மருந்துவிடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும். இதனால், இருமலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

  • சிலருக்கு அலர்ஜியால், கூட இருமல் ஏற்படலாம். அத்தகைய இருமலின் போது, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உங்களிடமிருந்து தள்ளி வைத்தாலே போதுமானது. 
  • புகைப்பிடிப்பதனால் நுரையீரலில் தொற்று ஏற்பட்டும், இருமல் உண்டாகும், ஆகையால் இருமல் உள்ள நேரங்களில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும்.
  •  சில நேரங்களில் நாம் உட்கொள்ளக்கூடிய மருந்துகளால் கூட, அலர்ஜி ஏற்பட்டு தொடர் இருமலை சந்திக்க நேரிடும். 

இந்த செய்தியையும் படிங்க...

  • எனவே, அவ்வாறான ஒவ்வாமைகளை உணரும் பொழுது உடனடியாக அத்தகைய மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.
  • இருமல் ஏற்பட்ட இரண்டு தினங்களுக்கு, வீட்டில் தயாரிக்க கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர் இருமலுடன் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Post a Comment

0 Comments