முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட கையெழுத்தால்- ஆட்டம் காணும் தனியார் நிறுவனங்கள்..!!
கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக முதன்முறையாக தலைமை செயலகத்துக்குள் நுழைந்த மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்த செய்தியையும் படிங்க...
டிகிரி முடித்தவரா நீங்கள்..? எஸ்பிஐ வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..
பதவியேற்ற முதல் நாளே, தான் கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினார். ஆவின் பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணமில்லை, கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 உள்ளிட்ட 5 கோப்புகளில் தான் அவர் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்று, மகளிர் சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்பது. கையெழுத்து போட்ட மறு நாளே, இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. சாதாரண பேருந்துகளில் ‘ மகளிருக்கு இலவசம்’ என எழுதி ஒட்டப்பட்டு விட்டது. இப்போது பெண்கள் எல்லாரும் தனியார் பேருந்துகளை விட்டுவிட்டு அரசு பேருந்துகளில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால், பெரும்பாலான தனியார் டவுன் பஸ்கள் வெறிச்சோடி போயுள்ளன.
பயணிகளை ஈர்க்கும் வண்ணம் நாமக்கல்லை சேர்ந்த எஸ்எம்ஆர் என்ற தனியார் பேருந்து நிறுவனம், மகளிருக்கு கட்டணச் சலுகை அறிவித்துள்ளது. அதாவது, பெண்கள் ரூ.2 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் பேருந்துகளிலேயே இந்த கட்டணச் சலுகை தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க...
இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா..?
ஊரடங்கு காரணமாக தற்போது பேருந்துகள் இயக்கப்படாததால் ஊரடங்கு முடிந்ததும் கட்டணச் சலுகை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அந்த கையெழுத்தால் பல தனியார் பேருந்து நிறுவனங்கள் ஆட்டம் காணுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments