Join Our Whats app Group Click Below Image

இந்தியாவில் கொரோனா- அதிகரிக்க காரணம் என்ன..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 இந்தியாவில் கொரோனா- அதிகரிக்க காரணம் என்ன..??

 இந்தியாவில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும், அரசியல் நிகழ்வுகளும் தான் கொரோனா அதிகரிக்க காரணம் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க...

கொரோனவால் இழந்த சுவை,மணம் திரும்ப வேண்டுமா? இதுவே அதற்கான மருந்து" 

 இந்தியாவில், கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்க பி.1.617, பி.1.1.7 உள்ளிட்ட உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக இருக்கலாம்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கவும், வேகமாக பரவவும், உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளன. 

பொது சுகாதாரத்தை சரியாக பயன்படுத்தாமல் விட்டதும் மற்றொரு காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments