Join Our Whats app Group Click Below Image

அதிர்ச்சி.. இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்றவர் -கொரோனாவுக்கு பலி !

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

அதிர்ச்சி.. இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்றவர் -கொரோனாவுக்கு பலி !


இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெதீஷ் லாட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கல பதக்கமும், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரண்டு முறை தங்க பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இந்தியாவின் சார்பில் பல சர்வேதச போட்டிகளில் ஜெகதீஷ் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்து வந்தார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு ஆணழகன் போட்டிகளிலும் வெற்றிபெற்று பதக்கங்களை குவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர் பாடி பில்டர் ஜெகதீஷ் லாட் (34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து வடோதாராவுக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு அவர் சொந்தமாக ஓர் உடற்பயிற்சி கூடத்தையும் தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த செய்தியையும் படிங்க...

7th Std Bridge Course Worksheet and  Key Answers (All Subjects):

🔴🔴 7th Std Tamil Bridge Course Worksheet and Key Answers 2021|

🔴🔴 7th Std English Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Maths Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Science Bridge Course Worksheet and Key Answer 2021.

🔴🔴 7th Std Social Science Bridge Course Worksheet and Key Answers 2021|

இதனிடையே, அண்மையில் ஜெகதீஷ் லாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் கடந்த 4 நாட்களாக குஜராத், வடோதரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாடி பில்டரும் இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்றவருமான லாட் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments