கொரோனா பரவலில் தமிழகம் 3ஆம் இடம் - மத்திய சுகாதாரத்துறை..!!
தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தும் நபரா நீங்கள்.? அதன் ஆபத்துகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!
அதி தீவிரமாக பரவிவந்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 13 மாநிலங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதில் குறிப்பாக 6 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது.
0 Comments