ஆசிரியர்களுக்கு- 25 முதல் பணி..!!
முழு ஊரடங்கு முடிந்ததும், ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், பள்ளிக்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மகேஷ், துறை ரீதியாக தினமும் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு பிரச்னை, மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், புதிய கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த செய்தியையும் படிங்க...
அத்துடன், புதிய கல்வி ஆண்டுக்கான பணிகளை, இந்த மாத இறுதியில் துவக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.தற்காலிக ஊரடங்கு முடிந்த பின், இந்த மாதம் 25ம் தேதி முதல், ஆசிரியர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அடுத்த வாரம், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.ஒரு நாள் ஊதியம்இதற்கிடையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் ஆசிரியர்கள், கொரோனா நிவாரண பணிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தருவதாக அறிவித்துள்ளனர்.
0 Comments