Join Our Whats app Group Click Below Image

சென்னை மண்டலத்தில் -15 தொகுதிகளில் திமுக முன்னிலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 சென்னை மண்டலத்தில் -15 தொகுதிகளில் திமுக முன்னிலை..!!

சென்னை மண்டலத்தில், திமுக கூட்டணி, 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த செய்தியையும் படிங்க......

 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள் - வெற்றி சான்றிதழ் யாருக்கு..??

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மதியம் 2.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது.

இந்நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய 15 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னி லை வகித்து வருகிறார்



Post a Comment

0 Comments