Join Our Whats app Group Click Below Image

" பாபா ராம்தேவ்விடம் ரூ.1000 கோடி இழப்பீடு கேட்டு " - இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 " பாபா ராம்தேவ்விடம் ரூ.1000 கோடி இழப்பீடு கேட்டு " - இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்..!!

இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்:

அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் - இயற்கை மருத்துவ குறிப்புகள் என்னென்ன..!!

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட,அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.இதனையடுத்து,பாபாராம்தேவ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது.

இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சங்கம்:

இதற்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சங்கம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.மேலும்,நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து,பாபா ராம்தேவ் வேறு வழியின்றி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இந்த செய்தியையும் படிங்க...

இரத்த வெள்ளையணுக்களை(WBC) அதிகரிக்க- எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் .!!

இருப்பினும்,பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில்,இந்திய மருத்துவ சங்கம் ,"நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் ரூபாய் 1000 கோடி இழப்பீடு தரவேண்டும்", என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Post a Comment

0 Comments