Join Our Whats app Group Click Below Image

C.A EXAM -குறித்து முக்கிய முடிவுகள்; இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்: ஐசிஏஐ(ICAI)..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 C.A  EXAM -குறித்து முக்கிய முடிவுகள்; இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்: ஐசிஏஐ(ICAI)..!!

பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு குறித்த முக்கிய முடிவுகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன (ஐசிஏஐ) உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க....

தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!! 

பட்டய கணக்காளராக விரும்புவோர் ஐசிஏஐ(ICAI) நடத்தும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டய கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 24, 26, 28, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20-ம் தேதிதொடங்கியது. அதன்படி, மே 4-ம் தேதி வரையும், தாமதக் கட்டணம் செலுத்தி மே 7-ம் தேதி வரையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக, முதல்நிலைத் தேர்வு முடித்தவர்களுக்கான இடைநிலைத் தேர்வுகள் மே 21-ம் தேதியிலிருந்தும், இறுதித் தேர்வுகள் மே 22-ம் தேதியிலிருந்தும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால், சிஏ(CA)-வின் இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலிருந்து கேள்விகள் எழுந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஐசிஏஐ(ICAI) உறுப்பினர் தீரஜ்கண்டேல்வால் தனது ட்விட்டர் பதிவில், “சிஏ-2021 தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய தொற்று பாதிப்பை தேர்வுக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க....

 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு -வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..!!

அதன்படி, தேர்வு நடத்துவதற்கான முக்கிய முடிவுகள் குறித்துஏப்ரல் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும். எனவே, தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கடினமாகப் படிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments