Join Our Whats app Group Click Below Image

'விவேக் சொன்னதை' எல்லா இடத்திலும் வலியுறுத்துவேன் - நடிகர் வையாபுரி..!!

Welcome to Our Tamil Crowd Website...

 'விவேக் சொன்னதை' எல்லா இடத்திலும் வலியுறுத்துவேன் - நடிகர் வையாபுரி..!!

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி மாரடைப்பால் காலமானார். கடந்த 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர், தன்னை போல எல்லாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதற்கு மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தியையும் படிங்க...

 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த- புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? 

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தடுப்பூசிக்கும் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. விவேக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அதை ஆமோதித்தனர்.

இந்த நிலையில், மதுரையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வையாபுரி, விவேக் கடையாக கொடுத்த பேட்டியில் மக்களுக்காக இந்த கருத்தை சொல்லிவிட்டுச் சென்றார். 45 வயதுக்கு மேல் உள்ள எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார். அதனால் நான் இனிமேல் ஷூட்டிங், பேட்டி, இன்டர்வியூ என எங்கு பேசினாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விவேக் சொன்னதை வலியுறுத்துவேன் என்று கூறினார்.

Post a Comment

0 Comments