Join Our Whats app Group Click Below Image

ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே - ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே - ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்..!!

ஸ்ரீராமநவமியான இன்று இதை பக்தியுடன் படித்தால் விருப்பம் நிறைவேறும்.  

உலகாளும் நாயகனே! ராமச்சந்திரனே! சூரிய குலத்தில் உதித்தவனே! அமிர்தமான ராம என்னும் திருநாமம் கொண்டவனே! அபயம் அளிப்பவனே! அகலிகையின் சாபம் தீர்த்தவனே! குளிர்ச்சி மிக்க நிலவு போல பிரகாசிப்பவனே! பிறவிக் கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வ வளம் தருவாயாக.

 ஜானகியின் பிரியனே! அனுமனுக்கு வாழ்வு அளித்தவனே! ஆதிமூலமானவனே! தாய் போல அன்பு மிக்கவனே! பயத்தைப் போக்குபவனே! இகபர சுகத்தை அருள்பவனே! சேது பாலம் அமைத்தவனே! ஏழு மரா மரங்களைத் துளைத்தவனே! லட்சுமணரின் சகோதரனே! ஏகபத்தினி விரதனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

 காருண்ய மூர்த்தியே! ஜோதியாய் ஒளிர்பவனே! ஸ்ரீராமஜெயம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனே!

கோசலையின் புதல்வனே! ரத்ன குண்டலம் அணிந்தவனே! மரவுரி தரித்தவனே! சபரிக்கு மோட்சம் அளித்தவனே!

எங்கள் உள்ளத்தில் குடியிருக்க வருவாயாக.* தசரதரின் வாக்கை காத்தவனே! சத்திய சீலனே! நேர்மை குணத்தவனே! மூவுலகுக்கும் அதிபதியே!

சம்சார சாகரத்தில் இருந்து காப்பவனே! விபீஷணனால் பூஜிக்கப்பட்டவனே! ராவணனை வதம் செய்தவனே! அயோத்தியின் மன்னவனே!

சக்கரவர்த்தி திருமகனே! சுக்ரீவனுக்கு வாழ்வு அளித்தவனே! தியாகராஜரால் போற்றப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.* கல்யாண குணத்தவனே!

ராஜலட்சணம் பொருந்தியவனே! வானரங்களின் தலைவனே! சங்கீதப் பிரியனே! ஜெகம் புகழும் புண்ணிய வரலாறு கொண்டவனே!

மாருதியின் மனம் கவர்ந்தவனே! ரகுகுல திலகனே! லவகுசர்களின் அன்புத் தந்தையே! விஜய ராகவனே!

சீதையின் நாயகனே! எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

தனி ஒருவனிடம் தப்பித்தவன்ராவணனுடன் நடந்த போரில் 14 ஆயிரம் வீரர்களை தனி ஒருவனாக அழித்தார் ராமர். அப்போது ராவணனின் படையில் இருந்த அகம்பணன் (நடுக்கம் என்பதே அறியாதவன்) ராமனை கண்டு அஞ்சி, உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்து ராவணனிடம் முறையிட்டான்,''அரசே, ராமன் அசகாய சூரனாக இருக்கிறான். அவன் விடும் பாணங்கள் காட்டு வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.

கரன், துாஷணன் கூட மாண்டு விட்டனர்'' என்று தலைகுனிந்தான்.உரக்க சிரித்தபடியே ராவணன் கேட்டான், ''நீ மட்டும் எப்படி தப்பித்தாய்?''''ராமன் ஏகபத்தினி விரதன் என்பதை சாதகமாக்கி கொண்டு, ஒரு பெண்ணைப் போல வேடமிட்டு நின்றேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை'' என்றான்.உடனடி பலன் கிடைக்க.மறைந்திருந்து வாலி மீது அம்பு எய்தார் ராமர். அம்பு பாய்ந்து கீழே விழுந்த வாலி, ராமரை கண்டதும் பிரம்மித்துப் போனான். 

இந்த செய்தியையும் படிங்க...

 அற்புத மருத்துவ குணங்கள் உள்ள- மாம் பூக்கள்'...!! 

'சக்கரவர்த்தி திருமகனே!நீயா இப்படிச் செய்தது? உன்னிடமா இரக்கம் இல்லை? என் மேல் அப்படி என்ன குற்றம் கண்டாய்? சீதைக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வளித்தாய்.

ஆனால் ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணமளித்து விட்டாயே. புரிகிறது தாய் போல இருந்த சீதையை நீ பிரிந்ததால் தான் உன்னிடம் ஈரம் இல்லாது போயிற்று போல என்று முனகியபடியே உயிர் விட்டான்.ராமனிடம் வைக்கும் எந்த கோரிக்கையானாலும் அது சீதையின் மூலமாவே நிறைவேற்றப்படும். எனவே கோரிக்கைகளை சீதையிடம் வைத்தால் ராமன் அருளால் உடனடியாக பலன் கிடைக்கும்.தர்மத்தின் மூச்சுராவணனுடன் நடந்த போரில், ராம லட்சுமணருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமன்.

ராமனுடன் நட்பு கொள்ள ராவணனின் தம்பி விபீஷணன் வந்த போது, 'இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவு பார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம்' என சுக்ரீவனும் வானரர்களும் மறுத்தனர். ராமனோ, 'நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே என் பணி' என்று தர்மத்தைக் காப்பாற்ற முயன்றார். ஒரு வேளை விபீஷணனை ஏற்காவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது.

இந்நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினான். பின் அனைவரும் சம்மதிக்க விபீஷணனை சேர்த்துக் கொண்டார் ராமர். இங்கே, ராமனின் மூச்சையே காப்பாற்றியிருக்கிறார் அனுமன். காரணம், அவர் வாயுவின் பிள்ளை அல்லவா!

நீங்க ராமனா? ராவணனா?பெயருக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. 'ராமர்' தொடர்பான பெயர்களுக்கு தனி மகத்துவம் உண்டு. காரணம், 'ராமன்' என்ற சொல்லுக்கு ரம்மியமானவன், ஆனந்தம் தருபவன் என்று பொருள்.

'ராவணன்' என்ற சொல்லுக்கு, 'பிறரை சிரமப்படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக் கூடியவன்' என்று பொருள். ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்த விதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி கொழுந்து விட்டெரியுமே. அப்படி இருந்ததாம். அனுமன் இலங்கையை துவம்சம் செய்வதை கேள்விப்பட்டு, ராவணன் எழுந்தவிதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம்.

எனவே குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது, பெயரின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு வையுங்கள். ராமனுக்கும் கோபம் வரும்சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட இரக்கம் கொண்டு, 'இன்று போய் நாளை வா' என்றவரையே, கடும் கோபத்திற்கு உள்ளாக்கினார் ஜாபாலி ரிஷி. ''ராமா!

மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது." என்றார் ஜாபாலி ரிஷி.இதைக் கேட்டதும் ராமனுக்கு கண்கள் சிவந்தன.''மகரிஷியே!

என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாக பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்!

எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம்," என்று கடிந்து பேசினார்.ஜாபாலி நடுங்கி விட்டார்.''அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால் இந்த வார்த்தைகள் தெளிவாக வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக் கொள்ளாதே," என்ற பின் ராமன் சமாதானம் ஆனான்.இது துளசியில் மட்டுமே!

வனவாசம் சென்ற ராம லட்சுமணர் கங்கை கரைக்குச் சென்றனர். அங்கு நின்ற ஓடக்காரன் 'கேவட்' முகமலர்ச்சியுடன் வரவேற்றான். ராமாயணத்தில் கேள்விப்படாத பாத்திரமாக இருக்கிறதே என வியக்கிறீர்களா? இந்த கேவட் தான் கம்பராமயணத்தில் 'குகன்' என்று அழைக்கப்படுகிறான்.

துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தில் இவனுக்கு 'கேவட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக, சீதை தன் மோதிரத்தை கொடுத்தாள். இதை கண்ட கேவட், "சுவாமி! நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள்.

ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் நாம் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது," என மறுத்தான். அவனது அன்பை கண்ட ராமர், "உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம்" என்றார்.

சொன்னால் சொன்னது தான்! தன் முடிவிற்கு தானே நாள் குறித்துக்கொண்டு, ராமன் வைகுண்டம் சென்ற கதை தெரியுமா ராவணனால் மிகவும் சிரமப்படுகிறோம் என தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். ''தேவர்களே!

நான் பூமியில் பிறந்து பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழித்து விடுவேன், கவலையை விடுங்கள்,'' என்றார். சொன்னபடியே செய்து முடித்தார். அவர் வாழ்வின் கடைசி நாளும் வந்தது.

இந்த செய்தியையும் படிங்க...

2 நாட்கள் முழு ஊரடங்கு - அதிரடி அறிவிப்பு !! 

அயோத்தி அரண்மனைக்கு வந்து ராமனைச் சந்தித்தான் எமன். ''ஐயனே! இன்றோடு தங்கள் ஆயுள் முடிகிறது, கிளம்பலாமா?'' என்றான். மறு பேச்சில்லாமல் சரியென்று கிளம்பி விட்டார் உத்தமபுருஷர்.ராமன் நினைத்திருந்தால், தன் ஆயுளை எவ்வளவு காலத்திற்கும் நீட்டியிருக்கலாம்.

ஆனால் அவர் சொன்னதை சொன்னபடி காப்பாற்றினார். ஒரு சத்தியம் சத்தியத்தை காப்பாற்றியதில் என்ன ஆச்சர்யம் வேண்டியிருக்கிறது! கம்ப ராமாயண பாடல்நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்.நைவேத்தியம் இது தான்! சுவாமிக்கு பிரசாதமாக வடை, பருப்பு, நீர் மோர், பானகம் படைக்கலாம்.

பூஜை செய்ய ஏதேனும் ஒரு பதார்த்தம், பிரசாதம் வைத்து துவங்கலாம்.வீட்டிலேயே ஸ்ரீராம நவமி கொண்டாடுங்கள்!ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம்.பூஜை செய்யும் இடத்தில், சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே ஹனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார்; நமக்கும் ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம். பூஜை முடித்து இறுதியில் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்

Post a Comment

0 Comments