Join Our Whats app Group Click Below Image

கை மீறி போய்விட்டது கொரோனா: மன்னிப்பு கேட்டார் எடியூரப்பா..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கை மீறி போய்விட்டது கொரோனா: மன்னிப்பு கேட்டார் எடியூரப்பா..!!

"கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவிலிருந்து மீண்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இந்த செய்தியையும் படிங்க....

உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.! 

எடியூரப்பா கூறியதாவது: ஒரு வீட்டில் 3 முதல் 4 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைதான் கொரோனாவை எதிர்க்க ஒரே தீர்வு.கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். 

இனி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாஸ்க் அணியாமல் வருவோரிடம் அபராதம் விதித்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லாதீர்கள். சமூகத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments