உதவி காவல் ஆய்வாளர்களுக்கு -மறு தேர்வு நடத்த வேண்டும் : தேர்வர்கள்..!!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர்களுக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில், உதவி காவல் ஆய்வாளர் தேர்வு எழுதிய தேர்வர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அவர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றதாகவும், தேர்வு முடிவுகள், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியையும் படிங்க...
இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாவது அலை-உலகமே பயப்படுவது ஏன்..??|
பல்வேறு குளறுபடிகளோடு நடைபெற்றுள்ள இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்மையான முறையில் மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
0 Comments