Join Our Whats app Group Click Below Image

கோடைக் காலத்தில் -வெந்நீர் குடிக்கலாமா..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கோடைக் காலத்தில் -வெந்நீர் குடிக்கலாமா..??

அடிக்குற வெயிலுக்கு வெந்நீர் குடிப்பதா? என்று பலரும் கேட்கலாம். ஆனால், அனைத்து பருவ காலங்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு சில தம்ளராவது வெந்நீர் அருந்துங்கள் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த செய்தியையும் படிங்க...

தைராய்டு இருப்பவர்களுக்கு -ஏற்படும் பாதிப்புகள் என்ன..?? 

  • கோடைக் காலத்தில் குளிர்ச்சியான நீரை அருந்துவதைவிட வெந்நீரே சிறந்தது என்கின்றனர்.
  • சாதாரணமாக கோடைக் காலத்தில் நாக்கு வறண்டு காணப்படும். எனவே, குளிர்ச்சியான பானங்களை நாக்கு தேடி ஓடும். இது வழக்கமான ஒன்று தான்.
  • ஆனால் அப்படி நாக்கு வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரையே அருந்த வேண்டும். எந்தவொரு பருவ காலங்களிலும் குளிர்ச்சியான நீரை அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
  • நாக்கு அதிகமாக வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரை அருந்துவது போல, மற்ற நேரங்களில் வெந்நீர் அருந்தலாம்.
  • பகல் நேரங்களில் வெந்நீர் அருந்த முடியாதவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு தம்ளர் வெந்நீரும், அதேபோல இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு தம்ளர் வெந்நீரும் அருந்துவது உடலியல் கோளாறுகளை நீக்கும்.
  • கோடைக் காலத்தில் வெந்நீர் அருந்தக்கூடாது என்றில்லை. வெந்நீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகமாகும் என்பதும் உண்மையில்லை.
  • கோடைக் காலத்தில் தாராளமாக வெந்நீர் அருந்தலாம். 
  • சொல்லப்போனால், கோடையில் வெந்நீர் அருந்துவது உடல் வெப்பநிலையைக் குறைக்கும் என்றே கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments