Join Our Whats app Group Click Below Image

இரவு நேர ஊரடங்கு, பேருந்து சேவை ரத்து, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முழு விவரம்..!!

Welcome to Our Tamil Crowd Website...

  இரவு நேர ஊரடங்கு, பேருந்து சேவை ரத்து, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முழு விவரம்..!! 

இரவு நேர ஊரடங்கு, பேருந்து சேவை ரத்து, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முழு விவரம் இங்கே:

 கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது கொரோனா பரவல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

 இந்நிலையில் கோரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது - லான்செட் இதழில் தகவல்! 

 இரவு நேர ஊரடங்கு எவற்றுக்கெல்லாம் அனுமதி:

 இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமல்படுத்தப்படும்.

 இரவு நேர ஊரடங்கு போது ,தனியார் பொது பேருந்து போக்குவரத்து ,வாடகை ஆட்டோ ,டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

 தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

 மாநிலங்களுக்கு இடையே ஆன  தனியார் பேருந்து சேவைகள் இன் போது கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் ஆன முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

 இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது:

 அவசர மருத்துவ சேவைகளும், விமான நிலையம்/ ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

 மேலும் ,அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம் ,தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் ,ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், இரவு நேர ஊரடங்கு இன் போது அனுமதிக்கப்படும் .

ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

 பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

 தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கு போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

 இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணி புரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

 கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி.

 மாஸ்க்  அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு. 

பொது:

 நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் ,அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை .

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகம் மற்றும் அருங்காட்சியங்கள் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க...

 உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா தீவிரமாகாது! 

 நிலையான வழிமுறைகளை பின்பற்றி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள், அனைத்தும் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

 நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள், மற்றும் கூட்டங்களுக்கு (10-04-2021) முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே குடமுழுக்கு திருவிழா, நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று இருந்தாலோ, அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்து இருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் கோயில் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்தினர் உடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

 புதிதாக குடமுழுக்கு திருவிழாக்கள் நடத்துவதை சம்மந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள் தற்காலிகமாக ஒத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது

Post a Comment

0 Comments