Join Our Whats app Group Click Below Image

நாளை முழு லாக்டவுன். சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 நாளை முழு லாக்டவுன். சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்திய அரசு, ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன் படி, நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

 தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை..?? இன்று அறிவிப்பு..!! 

ஊரடங்கு நேரத்தின் போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவசர தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், போதுமான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments