அனைவரும் தடுப்பூசி போடுங்கள்: முதல்வர் வேண்டுகோள்..!!
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க....
இதற்கான முன்பதிவு இன்று (ஏப்.,28) மாலை 4 மணிக்கு துவங்கியது.இந்நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.
இந்த செய்தியையும் படிங்க....
இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன்.
0 Comments