Join Our Whats app Group Click Below Image

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை. சாமானிய மக்கள் அதிர்ச்சி.!!

Welcome to Our Tamil Crowd Website...

 மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை. சாமானிய மக்கள் அதிர்ச்சி.!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து பேரதிர்ச்சி கொடுத்தது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை, மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்பட்டது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. இது, தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்து விலை உயர்வுக்கு வித்திட்டது.

இந்த செய்தியையும் படிங்க...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி -மருத்துவமனையில் அனுமதி..!! 

பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்தது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காணுகிறது. இதனால், தங்கம் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து மீண்டும் ரூ.344 உயர்ந்துள்ளது.

இன்றைய மாலை நிலவரத்தின் படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4,495க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.35,960க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200க்கும் விற்பனையாகிறது.

Post a Comment

0 Comments