எக்சிட் போல் ரிசல்ட்: அவசரக் கூட்டத்தை கூட்டிய- ஸ்டாலின்..!!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறது. கருத்துக்கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களுமே திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்தன.
இந்த செய்தியையும் படிங்க...
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் வேட்பாளர்களும் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது செய்யப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக பின்னடைவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள தொகுதிகளின் நிலவரங்கள் குறித்தும் வேட்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிப்பார் என தெரிகிறது.
0 Comments