Join Our Whats app Group Click Below Image

தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது...!!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது...!!!

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இந்த செய்தியையும் படிங்க...


 இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று பவுன் தங்கம் ரூ.33,296 ஆக இருந்தது. இதன்பிறகு, சில நாள்கள் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க...

வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகம் வரும் பயணிகள்  இ-பாஸ்(emergency-pass) விண்ணப்பிக்க...!! 

ஒரு கிராம் ரூ.15 உயா்ந்து, ரூ.4,380 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளிவிலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.71,600 ஆகவும் இருந்தது.

விலை உயா்வுக்கான காரணம் பற்றி சென்னை நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளா் சாந்தகுமாரிடம் கேட்டபோது,' அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு, சா்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை 1,700 ஆக இருந்தது. தற்போது இது 1,745 டாலராக உயா்ந்துள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க...

 கொரோனா விதிகளை மீறுவோரிடம்- அபராதம் விதிக்கப்படும்...!!! 

இதுதவிர, சா்வதேச அளவில் கரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக, பெரிய முதலீட்டாளா்கள் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்கத்தின் பக்கம் தங்கள் பாா்வையை திருப்பியுள்ளனா். தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வதால், அதன் தேவை உயா்ந்து, விலை உயா்ந்துள்ளது. இதேநிலை தொடா்ந்தால், தங்கம் விலை தொடா்ந்து உயரும்' என்றாா் அவா்.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,380

1 பவுன் தங்கம்...............................35,040

1 கிராம் வெள்ளி.............................71.60

1 கிலோ வெள்ளி.............................71,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,365

1 பவுன் தங்கம்...............................34,920

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

Post a Comment

0 Comments