Join Our Whats app Group Click Below Image

தங்கத்தின் விலை -சவரனுக்கு ரூ.160 குறைந்தது..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தங்கத்தின் விலை -சவரனுக்கு ரூ.160 குறைந்தது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

இந்த செய்தியையும் படிங்க

எக்சிட் போல் ரிசல்ட்: அவசரக் கூட்டத்தை கூட்டிய- ஸ்டாலின்..!! 

கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,405 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.72.80 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments