Join Our Whats app Group Click Below Image

100 நாள் வேலைத்திட்டத்தில் 'இவர்களுக்கு' தடை. தமிழக அரசு உத்தரவு!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 100 நாள் வேலைத்திட்டத்தில் 'இவர்களுக்கு' தடை. தமிழக அரசு உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, 100 நாள் வேலைத்திட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

 தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க..!! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரேநாளில் 15,684 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 97ஆயிரத்து 672ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 94பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி பலியான நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் ஞாயிறு முழுபொதுமுடக்கத்தால் கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்றே குறைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க....

 "எட்டு மாநிலங்கள் இருக்கும்போது தமிழகத்தை மட்டும் குறிவைப்பது- இதற்காகத்தானா? 

  • இந்நிலையில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
  • இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
  •  கொரோனா தடுப்பு வழியை பின்பற்றி வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் வெற்றிலை, பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments