Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 05, 06.04.2021 தேதிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.
வரும், 6ம் தேதி காலை, 5:30 மணிக்கு நடக்கும் ஓட்டுப்பதிவில், குறைந்தபட்சம், 50 ஓட்டுப்பதிவு செய்ய வேண்டுமென, ஓட்டுச்சாவடி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு தொகுதியும், ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வருகின்றன.
வரும் 6ம் தேதி காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், (5ம் தேதி) மதியம், 12:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிட வேண்டும். மாவட்ட அளவில், 16 ஆயிரத்து, 045 பேர், ஓட்டுச்சாவடி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஓட்டுப்பதிவு நாளில், காலை, 5:00 மணிக்கே, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
காலை, 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். குறைந்தபட்சம், இரண்டு வேட்பாளர் ஏஜன்ட் இருந்தாலே, மாதிரி ஓட்டுப்பதிவை துவக்கலாம்.
அதன் பின்னரும், வராதபட்சத்தில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தலைமையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தலாம். ஒவ்வொரு சாவடியிலும், குறைந்தபட்சம், 50 ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும்.கட்டாயம், 'நோட்டா'வுக்கும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவை முடித்து, 'க்ளோஸ்' பட்டனை அழுத்த வேண்டும்.
அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் உள்ள, 'பேலட்' என்ற பட்டனை அழுத்தி, அதற்குபிறகு ஓட்டளிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
'ரிசல்ட்' பார்க்கணும்.இறுதியாக, 'ரிசல்ட்' பட்டனை அழுத்தி, மாதிரி ஓட்டுக்களாக பதிவான ஓட்டுக்களை சரிபார்க்க வேண்டும்.
பிறகு, 'கிளியர்' பட்டனை அழுத்தி, இயந்திரத்தை சரிசெய்துகொள்ளலாம். இறுதியாக, 'டோட்டல்' என்ற பட்டனை அழுத்தி, 'ஜீரோ' என்று இருப்பதை முகவர்களிடம் காட்ட வேண்டும்.
'விவி பேட்'டில் உள்ள ரசீதுகளை எடுத்து, மாதிரி ஓட்டுப்பதிவுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். ரசீதுகளின் பின், மாதிரி ஓட்டுப்பதிவு என எழுதி, கருப்புநிற உறையில் போட்டு, 'சீல்' வைத்து பத்திரமாக வைக்க வேண்டும்.
அதை, பிரத்யேக பெட்டியில் வைத்து, 'சீல்' வைத்து ஏஜன்டுகள் கையெழுத்து பெற்று பத்திரமாக வைக்க வேண்டும்.
மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்பான இரண்டு அறிக்கை தயாரித்து, மண்டல தேர்தல் அலுவலர் வரும்போது, ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் 'கிரீன்' பேப்பர் சீல்' மற்றும் 'ஸ்ட்ரிப் சீல்' வைத்து, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்த வேண்டுமென, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments