Join Our Whats app Group Click Below Image

தேர்தலை முன்னிட்டு -சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தேர்தலை முன்னிட்டு -சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 215 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கூடிய 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், தேர்தலை முன்னிட்டு 5 நாட்களுக்கு, 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களுரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரத்து 644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை, அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும்,

விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு, பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டது பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி, விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செலூம் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூர் செல்லும் பேருந்துக்ள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் ஆறு மற்றும் ஏழாம் தேதி வரை தினசரி இயக்கப்படுகின்ற 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கும், சேலம் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களுருக்கும் என மொத்தம் ஆயிரத்து 738 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments