Join Our Whats app Group Click Below Image

'பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத்தன்மை'- திருக்குறள் தேசியக் கருத்தரங்கு

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 திருக்குறள் தேசியக் கருத்தரங்கு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ள திருக்குறள் தேசிய கருத்தரங்கிற்கான கட்டுரைகளை வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 'தலைவா் சொ.க.கோவிந்தசாமி-கோ.சின்னம்மாள் திருக்குறள் அறக்கட்டளை'யின் மூலமாக 'பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத்தன்மை' என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

கருத்தரங்கிற்கான கட்டுரைகள் பின்வரும் விதிமுறைகளுக்கு உள்பட்டு வரவேற்கப்படுகின்றன:

 திருவள்ளுவரின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களை மையமாகக் கொண்டு கட்டுரைகள் அமைதல் வேண்டும். ஒருங்குறி (யூனிகோடு) எழுத்துருவில் ஏ4 அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்தல் வேண்டும். கட்டுரைகள் மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

 சிறந்த கட்டுரைகள் அடங்கிய நூல் உடன் நிறுவன வெளியீடாக வெளியிடப்படும். கட்டுரை அளிப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ள கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542998, 9500012272 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments