சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர்கிரீன் கப்பலில் உள்ள மாலுமிகள்: இந்தியர்கள்.
சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள எவர்கிரீன் கப்பலில் பணிபுரியும் மாலுமிகள் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து நாட்டிற்கு எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரையில் மோதி குறுக்கே நின்றது . கால்வாயின் குறுக்காக கப்பல் சிக்கிக் கொண்டதால் மற்ற கப்பல்கள் சென்று வர முடியாமல் அப்பகுதியில் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே எவர் கிரீன் சரக்கு கப்பலை ஓட்டியவர்கள் அனைவரும் இந்தியர்கள் என கப்பலை நிர்வகிக்கும் பெர்ன்ஹர்ட் ஷூல்ட் ஷிப்மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் கப்பலில் பயணித்த 25 பேரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
15 நாட்கள் கடல் வழி பாதையில் ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதியாக சூயஸ் கால்வாய் முக்கிய இடம் பெறுகிறது. தற்போது எவர் கிரீன் கப்பல் சிக்கி உள்ளதால் மாற்று பாதையாக ஆப்பிரிக்காவின் தென் முனைக்கு சென்று ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும். இந்தவழியாக செல்லும் போது மேலும் இரண்டு வாரங்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments