Home Today Health News சித்த மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சை பயன்கள் :
சித்த மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சை பயன்கள் :
Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
சித்த மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சை பயன்கள் : எலுமிச்சை பயன்கள்
எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதன் தோலின் உட்புறம் வெளியே வரும்படி செய்து முழங்கை, பின் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மறையும். எலுமிச்சம் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென இருக்கும். எலுமிச்சம் பழச்சாற்றில், தேயிலை தண்ணீரை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும். எலுமிச்சம்பழச் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கண் பிரச்சினைகள் தீரும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், கடலைமாவு கலந்து வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை மற்றும் தலை முடியில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும் . எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும் . எலுமிச்சம்பழ சாற்றில், தேன் கலந்து குடித்து வந்தால் உடல் வலுப்படும் . எலுமிச்சம்பழச் சாறு, தக்காளி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகப்பொலிவு கூடும். எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் மறையும். எலுமிச்சம் பழ சாற்றை தினமும் குடித்து வந்தால் காக்காய் வலிப்பு குணமாகும். எலுமிச்சம்பழத்தை கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண்ணில் நீர் வடிதல் நிற்கும், கண் எரிச்சலும் குணமாகும். எலுமிச்சம்பழ சாற்றில், தேன் கலந்து உதடுகளில் பூசி வந்தால் புதுப்பொலிவு கிடைக்கும். எலுமிச்சம் பழ சாற்றில், லவங்க பொடியை கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். எலுமிச்சம்பழ சாற்றில், சர்க்கரை கலந்து உடலில் கருமையான இடங்களில் பூசி வந்தால் விரைவில் நிறம் மாறும். எலுமிச்சம்பழச்சாறு, வெள்ளரிக்காய், தக்காளி மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் தோலின் கருப்பு நிறம் மாறும். எலுமிச்சம்பழத்தை, மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும். எலுமிச்சம் பழச்சாற்றில், தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். சுக்கு காபியில், எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் ஜலதோஷம் வராது . எலுமிச்சம் பழச்சாறு, வல்லாரைக் கீரை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெண்புள்ளிகள் மறையும். எலுமிச்சம் இலை கசாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சம்பழ சாற்றில், உப்பு சேர்த்து குடித்தால் வாந்தி உடனே நிற்கும். எலுமிச்சம் பழச்சாற்றில், கோதுமை மாவை குலைத்து கட்டிகள் போன்றவற்றை மீது தடவினால் அவை விரைவில் மறையும். எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த கொதிப்பு குணமாகும். இளநீரில், எலுமிச்சம் பல சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் போன்றவை குணமாகும். எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் பித்தம் ,தலை கிறுகிறுப்பு குணமாகும். எலுமிச்சம் பழ சாறு, வெங்காய சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். எலுமிச்சம் பழ சாற்றை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக்கொண்டால் தோலின் கருமை நிறம் மாறும். எலுமிச்சம் பழ சாறு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன் ,எண்ணெய் 2 ஸ்பூன் மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். எலுமிச்சம் பழ சாற்றை, கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்கு குளித்தால் பேன், பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெயில், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும். எலுமிச்சம்பழம் சாற்றை, காபியில் கலந்து குடித்தால் தலைவலி நீங்கும். கசாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும். எலுமிச்சை இலை, நெல்லி இலை, வேர்க்கடலை இலை மூன்றையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாகும், வழவழப்பாகவும் மாறும். எலுமிச்சம்பழ சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். எலுமிச்சம் பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும் . எலுமிச்சம் பழச்சாற்றில், மா மர பிசினை குறைத்து காலில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் மீது தடவினால் விரைவில் குணம் கிடைக்கும். பாதாம் பருப்பு பொடி, எலுமிச்சம்பழச்சாறு கலந்து பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக இருக்கும். எலுமிச்சம் பழ சாற்றை, நீரில் கலந்து சேற்றுப் புண்கள் தடவினால் அவை விரைவில் குணமாகும். எலுமிச்சம் பழசாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும். எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி மறையும். குளிர்ந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஆப்ப சோடாவை கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே நிற்கும். எலுமிச்சம்பழ சாற்றில் ,மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். எலுமிச்சம் பழ சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது குடைச்சல் குணமாகும்.
0 Comments