Join Our Whats app Group Click Below Image

"முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்"- ஆ. ராசா.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

"முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்"- ஆ. ராசா.

திமுக எம்.பி ஆண்டிமுத்து ராசா பேசியது:

தாயை தெய்வமாக போற்றும் தமிழகத்தில், தமிழக முதல்வர் குறித்தும் தமிழக முதல்வரின் தாயார் குறித்தும், திமுக எம் பி ஆண்டிமுத்து ராசா அவதூறாக, அருவருக்கத்தக்க வகையில் பேசியது தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதைவிட மேலும் கொடூரமாக திமுக தலைவரும், ராசாவும் "நான் அப்படி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்து, தவறை உணராமல் விளக்கம் அளித்து இருப்பது, தமிழக மக்களை மேலும் கோவத்துக்கு உள்ளாக்கியது.

வேறு வழியே இல்லாமல், இன்று செய்தியாள்களை சந்தித்த ஆ ராசா, "முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதோடு நிறுத்தாமல், எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல, பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்றும், எனது வார்த்தையால் உண்மையில் முதல்வர் மனம் நோகி இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தெரிவித்த ஆ ராசா, நான் சொல்லியது சரிதான்., தமிழக மக்கள் தான் முட்டாள்கள்., தமிழகத்தின் தான் மட்டும் தான் அறிவாளி என்பது போல ஆணவத்தோடு பேசி இருக்கிறார்.

தமிழகமே கொந்தளித்த போதும்., தான் பேசியது தவறு என்பதை உணராத ஆண்டிமுத்து ராசா., தமிழகத்திற்கே அழுக்கு என்று சமூக ஆரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆ ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ஆ. ராசா பேசியது குறித்த ஆராய்ச்சியில் தேர்தல் நடத்தை விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்பி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆ. ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments