Join Our Whats app Group Click Below Image

கொரோனா தடுப்பூசி செலுத்தப்போகிறீர்களா? - கட்டாயம் இதை படியுங்கள்

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா  தடுப்பூசி செலுத்தப்போகிறீர்களா? - கட்டாயம் இதை படியுங்கள்

  • எப்போதாவது மது குடிப்பவர்கள்‌ தடுப்பூசி செலுத்திய நாளில்‌ குடிக்க வேண்டாம்‌. 
  • தினமும்‌ குடிப்பவர்கள்‌, முன்னதாக 2 நாட்களும்‌, பின்‌ 14 நாட்களும்‌ குடிக்க வேண்டாம்‌. 
  • ஊசி செலுத்திக்கொண்ட நாளில்‌ புகைக்க வேண்டாம்‌. 
  • ஊசி  செலுத்திக்கொண்டவர்கள்‌ குடும்ப மருத்துவரை, ஆலோசித்த பின்‌ பிற நோய்களுக்கான ஊசியை செலுத்திக்கொள்ளலாம்‌. 
  • முதல்‌ தவணை ஊசி செலுத்திய பின்‌, 9௦ நாட்களுக்கு தடுப்பு சக்தி கிடைக்கும்‌. பின்‌ குறையும்‌. இரண்டாவது தவணை ஊசி செலுத்திய பின்‌ முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது. 
  • கொரோனா தாக்கி குணமானவர்கள்‌, பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள்‌ 12 வாரங்கள்‌ கழித்து ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 
  • உயர்‌ ரத்த அழுத்தம்‌, இருதய நோய்‌, சர்க்கரை நோய்‌, சிறுநீரக நோயாளிகள்‌ அவற் றிற்கு மருந்து சாப்பிடுபவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 
  • பைபாஸ்‌ ஆப்பரேஷன்‌ செய்‌தவர்கள்‌, ஸ்டென்ட்‌ பொருத்‌திக்கொண்டவர்கள்‌,     கர்ப்பிணிகள்‌‌, டயாலிசிஸ்‌ சிகிச்சை பெறுபவர்கள்‌ ஊசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌. 
  • இருதய நோய்க்கு ஆஸ்பிரின்‌, குளோபிடோகிரில்‌, டிக்கா கிரிலர்‌ போன்ற மாத்திரைகள்‌ எடுத்துக்கொள்பவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 
  • ஹெப்பாரின்‌, வார்பாரின்‌, அசிட்ரோம்‌ போன்ற ரத்த உறைவுத்‌ தடுப்பு மருந்துகளைப்‌ பயன்படுத்துபவர்கள்‌ ஊசி செலுத்துவதற்கு முந்தைய நாளிலும்‌ ஊசி செலுத்திக்‌ கொள்ளும்‌ நாளிலும்‌ அவற்றைப்‌ பயன்படுத்த வேண்டாம்‌. 
  • பக்கவாதம்‌, மன நோய்‌, வலிப்பு நோய்‌, பார்க்கின்சன்‌ நோய்‌, மறதி நோய்‌, அல்சீமர்‌ நோய்‌ போன்ற மூளை, மனம்‌, நரம்பு நோய்களுக்கு சிகிச்சை பெறு பவர்கள்‌, ஊசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌. 
  • வழக்கமான மாத்திரைகளை நிறுத்த வேண்டியதில்லை. ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, ஒவ்வாமை தோல்‌ நோய்கள்‌, மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்‌ ஊசி செலுத்திக்கொள்ளலாம்‌. 
  • ஊசி செலுத்திக்கொண்ட பெண்‌ ‌ 6 முதல்‌ 8 வாரங்கள்‌ கழித்து கர்ப்பத்துக்குத்‌ தயாராகலாம்‌. 
  • சிறுநீரக மாற்றுச்‌ சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை' மேற்கொண்டவர்‌கள்‌ குடும்ப மருத்துவரிடம்‌ ஆலோசனை பெறவும்‌. 
  • புற்றுநோய்‌ சிகிச்சை பெறுபவர்கள்‌ புற்றுநோய்‌ சிறப்பு மருத்துவரின்‌ ஆலோசனை பெறவும்‌. 
  • தடுப்பூசிக்குப்பின்‌ வலி நிவாரணி மாத்திரைகள்‌ எடுக்க வேண்டியிருந்தால்‌ குடும்ப மருத்துவரின்‌ ஆலோசனை பெறவும்‌. 
  • ஊசி செலுத்திய இரண்டு நாட்களுக்கு பின்‌ எளிமையான உடற்பயிற்சி செய்யலாம்‌. 
  • ஒரு வாரத்திற்கு பின்‌ கடுமையான பயிற்சிகள்‌ செய்யலாம்‌. 

Post a Comment

0 Comments