Join Our Whats app Group Click Below Image

தினம் ஒரு தகவல்-பாரத ரத்னா விருது

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

                                  பாரத ரத்னா விருது

பாரத ரத்னா விருது பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.

  •  தங்களின் உயரிய சேவையினால் தங்கள் நாட்டின் பெருமையை உயர்த்திய இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருது பாரத ரத்னா விருது.
  •  இவ்விருது இந்திய குடிமகனுக்கு மட்டுமல்லாமல் உயரிய சேவையினால் தங்கள் நாட்டின் பெருமையை உயர்த்திய அயல்நாட்டு குடிமகனுக்கும் இது வழங்கப்படும் .
  • பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  •  பாரத ரத்னா விருது முதல் முதலாக இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர். சி .வி. ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  •  பாரத ரத்னா விருது- இந்த விருது தங்கத்திலான 35 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட வட்டவடிவிலான பதக்கம்.
  •  இப்பதக்கத்தின் முன்பக்கம் மேலே சூரியனும் இடையில் பாரதரத்னா என்ற எழுத்தும் கீழ்ப்பக்கம் தாமரை மலரும் கொண்டது.
  •  பதக்கத்தின் பின்புறம் இந்திய அரசின் முத்திரையும் "சத்தியமேவ ஜெயதே" என்ற வாசகமும் குறிக்கப்பட்டிருக்கும்.
  •  வெள்ளை நிற நாடாவில் சேர்க்கப்பட்டுள்ள பதக்கம் குடியரசுத் தலைவரால் விருது பெறுபவர்  கழுத்தில் அணிவிக்கப்படும்

 பாரத ரத்னா விருதை பெற்ற அயல்நாட்டினர் சிலர்: 

  • அன்னை தெரசா,
  •  கான் அப்துல் கபார் கான், 
  • நெல்சன் மண்டேலா போன்றவர்கள்.

 பாரத ரத்னா விருது பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்  ஒரு விருதாகும்.

 ஒவ்வொரு ஆண்டும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற வரையறை எதுவும் வகுக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments