Join Our Whats app Group Click Below Image

மருத்துவ குறிப்பு: வாய்ப்புண் குணமாக:

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 மருத்துவ குறிப்பு: வாய்ப்புண் குணமாக: 

வாய்ப்புண் குணமாக

  1. அகத்திக் கீரை ,மணத்தக்காளிக் கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் இரண்டே நாளில் வாய்ப்புண் குணமாகும்.
  2.  அகத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
  3.  அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, முட்டைகோஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும்.
  4.  ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.
  5.  கரிசலாங்கண்ணிக் கீரை சாற்றில் 30 மில்லி நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
  6.  காட்டு  ஏலக்காயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, பல் ஈறு போன்றவை குணமாகும்.
  7.  கொய்யா பூவை கசாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
  8.  நாவல் மர இலையை (ஐந்து) தண்ணீரில் (அரை லிட்டர் )போட்டு கசாயம் காய்ச்சி குடித்தால் வாய்ப்புண், வாய் வேக்காடு குணமாகும்.
  9.  நெல்லிக்காய் சாறு, திப்பிலி பொடி, தேன் மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
  10.   வெள்ளரி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாய்ப்புண், தொண்டை புண் ஆறும்.
  11. மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். வாய் துர்நாற்றமும் தீரும்.
  12.  மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி) மாசிக்காயை (ஒன்று) சேர்த்து கசாயம் வைத்து குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும் .
  13. புளியாரைக்  கீரையுடன், வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

Post a Comment

0 Comments