Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
சித்த மருத்துவ குறிப்புகள்: ஓமம் பயன்கள்:
ஓமத்தின் பயன்கள்
ஓமம்' மிளகு- தலா 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை இடித்து பொடியாக்கி நெல்லிக்காய் அளவு காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பசம், பேதி போன்றவை குணமாகும்.
ஓமம் ,மாம்பருப்பு, கசகசா, கடுக்காய்- தலா 50 கிராம் எடுத்து பொடியாக்கி மோரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து குடித்தால் பேதி, சீத பேதி இரண்டும் உடனே நிற்கும்.
ஓமம், நாவல்கொட்டை, துத்தி ,பிரண்டை தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் உடனே குணமாகும், மூளை கிருமிகளும் அழியும்.
ஓமம், அருகம்புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் நாள்பட்ட புண்கள் ஆறும்.
ஓமத்தை, ஆடாதோடை இலை சாறு சேர்த்து அரைத்து 10 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் காசநோயை குணமாக்கும்.
ஓமத்தை, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து குளித்து வந்தால் சைனஸ் எனப்படும், நோய் குணமாகும்.
ஓமத்தை ஒரு ஸ்பூன் இரவில் வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
ஓமம் ,வேப்பிலை தலா 5 கிராம் எடுத்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் குடல் கிருமிகள் அனைத்தும் அழியும்.
ஓமம், கோதுமை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வீக்கம் உள்ள இடங்களில் பற்று போட்டால் மூன்றே நாட்களில் வீக்கம் கரையும்.
ஓமம், இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில் 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
0 Comments