Join Our Whats app Group Click Below Image

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,541 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்திலிருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 நாள்களில் 5,500 எட்டியது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4,82 ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 5,541 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. இதில் தேனாம்பேட்டை 649 நோயாளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர் மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,46,339 ஆக உள்ளது. இவர்களில் 2,37,375 பேர் குணமடைந்துவிட்டனர். 4,232பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். தற்போது 5,541 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 649 பேரும், கோடம்பாக்கத்தில் 543 பேரும், அண்ணாநகரில் 628 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தவிர, ராயபுரத்தில் 480 பேரும் திருவிகநகரில் 517 பேரும் அம்பத்தூரில் 492 பேரும் சிகிச்சையில் உள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.

மார்ச் 29: 815;

மார்ச் 28: 833;

மார்ச் 27: 775

மார்ச் 26: 739

மார்ச் 25: 664

மார்ச் 23: 532

மார்ச் 22: 496

மார்ச் 20: 458

மார்ச் 19: 421

மார்ச் 17: 395

மார்ச் 16: 352

மார்ச் 15: 317

மார்ச் 13: 271

மார்ச் 11: 292

மார்ச் 08: 229

மார்ச் 07: 251

மார்ச் 04: 189

மார்ச் 01: 171

தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 13,983 ஆக அதிரித்துள்ளது. நேற்று புதிதாக 2,279 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments