Join Our Whats app Group Click Below Image

தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின்- தீ விபத்து.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின்- தீ விபத்து.

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து - 30க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், துறை தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசம் என தகவல்

ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழக பள்ளி கல்வித் துறையின் மாநில தலைமை அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு, பள்ளி கல்வித் துறையின் பல்வேறு பிரிவு இயக்குநரகங்கள் உள்ளன. தனிக் கட்டடம்அதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள், தொடக்க கல்வி இயக்குநரகம், தனிக் கட்டடத்தில் இயங்குகிறது. 

இங்கு, தினமும் அலுவலர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் முதல் மாடியில் உள்ள பொருட்கள், நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வருவதற்குள், அங்கிருந்த கணினி அறை முழுதும் எரிந்து, அங்குள்ள எட்டு கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் சாம்பலாகின. தொடக்க கல்வித் துறையின், அரசு பள்ளிகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

விசாரணை

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விபரம், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, பணியாளர் விபரங்கள், நலத் திட்ட தகவல்கள், பென்ஷன் விபரம், அரசு பள்ளி உள்கட்டமைப்பு பராமரிப்பு, அதற்கான வரவு - செலவு நிதி கணக்கு உட்பட அனைத்து விபரங்களும் கணினியில் இருந்தன. 

அவை அனைத்தும் தீ விபத்தால் அழிந்து விட்டன. கணினியில் உள்ள, 'ஹார்டு டிஸ்க்' அனைத்தும் தீயில் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதால், அவற்றில் இருந்து தகவல்களை மீட்டு எடுக்க முடியாத நிலை உள்ளது. தொடக்க கல்வி இயக்குனராக உள்ள பழனிசாமியின் அறையை ஒட்டி, இந்த தீ விபத்து நிகழ்ந்து உள்ளது. இயக்குநரின் அறைக்கு தீ பரவாததால், பல முக்கிய ஆவணங்கள் காப்பாற்றப்பட்டன.இந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

விசாரணையில், கணினி அறையில் இருந்த, யு.பி.எஸ்., பேட்டரி அணைத்து வைக்கப்படாமல் இருந்ததால், மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், தகவல்களை அழிப்பதற்காக, யாராவது திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments