Join Our Whats app Group Click Below Image

கொரோனா பரவலை தடுக்க கூட்டம் கூடாதீர், மறவாதீர், மாஸ்க் அணிவீர்-சுகாதார துறை ,தேர்தல் ஆணையம்:

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா பரவலை தடுக்க கூட்டம் கூடாதீர், மறவாதீர், மாஸ்க் அணிவீர்-சுகாதார துறை ,தேர்தல் ஆணையம்: 

கொரோனா பரவலை தடுக்க கூட்டம் கூடாதீர் என்று சுகாதார துறையும் தேர்தல் ஆணையமும் சொல்கிறதே தவிர நாள் தவறாமல் கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகளை கண்டு கொள்வதே இல்லை,அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது ஆகவே டெஸ்ட் எடுத்துக் கொள்ள வாருங்கள் என்றால் கூட முடியாது என்று சொல்லிவிட்டு ஜீப்பில் தொண்டர்கள் சகிதம் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் பதவியில் இருந்துாலும் அதிகாரம் கொண்டிருந்தாலும் கொரோனாவிற்கு முன் செல்லுபடியாகாது என்பது கடந்த கால அனுபவம்.இருந்தும் எப்படியும் எம்.எல்.ஏ.,வாகவேண்டும் என்ற வேகத்தோடு எதையும் கண்டு கொள்ளாமல் தெருத்தெருவாக போய் வாக்காளர்களை வேட்பாளர்கள் பார்க்கின்றனர், தெரிந்தவர்களை கட்டிப்பிடிக்கின்றனர், குழந்தைகளைக் கொஞ்சுகின்றனர்.ஒரு வேளை இந்த வேட்பாளர்களுக்கு கொரோனா இருந்தால் ஒரு பாவமும் அறியாத அந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அல்லவா கொரோனா கொடுத்தவராகிவிடுகிறார்.இப்படி ஒரு நாளைக்கு ஆயிரம் பேரை பார்த்து வேட்பாளரும் அவருடன் வருபவர்களும் வாக்காளர்களிடம் கைகுலுக்கியபடி சென்றால் கொரோனா எவ்வளவு வேகத்தில் பரவும் என்பதை சொல்லவேண்டியதே இல்லை.இங்கே யாரையுமே திருத்த முடியாது நாமே நம்மை பாதுகாத்துக் கொண்டால்தான் உண்டு.அதற்கு முதல் வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மறவாமல் 'மாஸ்க்' அணியவேண்டும், அந்த மாஸ்க்கையும் பேருக்கு அணியாமல் மூக்கை மறைக்கும்படியாக அணியாக வேண்டும், எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் நான்கு அடி தள்ளி நின்று கும்பிட்டு விலகி செல்லுங்கள், நெருங்கி வந்தால் என் ஒட்டுக்கு உங்களுக்கு இல்லை என்று உரக்க சொல்லுங்கள்

Post a Comment

0 Comments