Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
மருத்துவக் குறிப்பு: இருமல் குணமாக.
இருமல் குணமாக.
வெற்றிலையுடன், மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.
பூண்டு சாறு எடுத்து அதில் வெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் ,உலர்ந்த திராட்சை (10) சீரகம் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
வில்வம் இலையுடன் (மூன்று), மிளகு (3) சேர்த்து பொடி செய்து காலையில் மட்டும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.
வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவள்ளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
லவங்கப்பட்டை, அக்கரா, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு. இருமல் ஆகியவை விலகும்.
முளைக்கீரை, அதிமதுரம், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
முருங்கைக் கீரை சாற்றில், தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.
முருங்கைக்காயை ,மிளகு ,மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கபம் ,இருமல் விலகும்.
அதிமதுரம், சுக்கு, ஏலக்காய், தாளிசபத்திரி, மிளகு, முந்திரி பருப்பு, தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் உட்பட வேறு சில நோய்களும் குணமாகும்.
அறுவதா இலையை காயவைத்து நெருப்பில் போட்டு எரித்தால் வரும் புகையை முகர்ந்தால் நாள்பட்ட இருமலும் குணமாகும்.
ஆகாயத்தாமரை இலை சாற்றில், சீரகத்தை மூன்று கிராம் அரைத்து சாப்பிட்டால் நீர்சுருக்கு, சீதபேதி, வரட்டு இருமல் ,போன்றவை குணமாகும்.
ஆகாயத்தாமரை இலை சாற்றுடன் ,பன்னீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
ஆடாதோடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
ஆடாதொடை வேர் ,கண்டங்கத்திரி வேர், திப்பிலி பொடி மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
ஆடாதோடா இலை, திராட்சை, கடுக்காய் மூன்றையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் குணமாகும்.
ஆலமர விழுதை பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து குடித்தால் சளி, இருமல் ,நெஞ்சு சளி போன்றவை குணமாகும்.
இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து காலை மாலை இரு வேளையும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் காச நோய் ,வறட்டு இருமல் ஆகியவை குணமாகும்.
இலுப்பைப் பூக்களை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்தால் தாகம், இருமல் நிற்கும்.
உகா மரத்தின் இலையை சாறு பிழிந்து 15 மில்லி அதில் சர்க்கரை கலந்து குடித்தால் நாள்பட்ட இருமல் குணமாகும் .
உருளைக்கிழங்கு இலைச்சாற்றை தினமும் 5 முதல் 10 மில்லி வரை குடித்து வந்தால் நாள்பட்ட இருமல் ,தூக்கமின்மை போன்றவை குணமாகும் .
எலுமிச்சை துளசியை கசாயம் வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட இருமல் குணமாகும்.
எலுமிச்சம் பழசாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
கடுகை 20, தேன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் மூச்சிரைப்பு ,இருமல் குணமாகும்.
0 Comments