Join Our Whats app Group Click Below Image

ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் வரை நீட்டிப்பு-மத்திய அரசு.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் வரை நீட்டிப்பு-மத்திய அரசு.

 ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, ஜூன், 30 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டன.பல மாதங்களாக அந்த ஊரடங்கு நீடித்தது. இதற்கிடையே, வாகனங்கள் வைத்திருப்போரில் பலரது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட இதர வாகன ஆவணங்களை, அந்த காலக்கட்டத்தில் புதுப்பிக்க இயலாமல் போனது.

எனவே, அந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை, மத்திய அரசு, தொடர்ந்து நீட்டித்து வந்தது. வரும், 31ம் தேதியுடன், அந்த காலவரையறைநிறைவடைய உள்ள நிலையில், ஆவணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசம், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஊரடங்கு காரணமாக, 2020 பிப்ரவரி முதல், ஓட்டுநர் உரிமம், பதிவு, 'பெர்மிட்' உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்க இயலாமல் உள்ளது.எனவே, அந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் ஜூன், 30 வரை, நீட்டிக்கப் படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments