Join Our Whats app Group Click Below Image

31-03-2021- கடைசி நாள். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.ஆதார் - பான் இணைப்பது எப்படி?

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 31-03-2021- கடைசி நாள். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.ஆதார் - பான் இணைப்பது எப்படி?

 ஆதார் பான் எண்ணை இணைப்பதற்கான இன்றே கடைசி நாள் என ஏற்கெனவே வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் அறிவிப்பின் படி மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும்.இல்லையெனில், உங்களது பான் எண் அல்லது பான் கார்டு செல்லாதது. பான் கார்டு இல்லையெனில் வருமான வரி செலுத்தவும் முடியாது, செலுத்தப்பட்ட வரியை திரும்பவும் பெற முடியாது. எனவே ஆதார் மற்றும் பான் எண் இணைக்க வேண்டியது கட்டாயம்.

மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1,000 ரூபாயை அபராதமாக விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இந்த அபராத விதிப்பிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் கிடைத்தது. முன்னதாக ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகிவிடும் என எச்சரித்து இருந்தது. இதற்காக கால அவகாசம் வழங்கி, பல முறை கால நீட்டிப்பும் செய்தது. கடைசியாக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31, 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.

ஆதார் - பான் இணைப்பது எப்படி?

1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

3. குறித்த இணையப் பக்கத்தில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை நிரப்புங்கள்

4. உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

5. UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

6. Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதார் - பான் இணைந்ததா சோதிப்பது எப்படி ?

1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.

5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

Post a Comment

0 Comments