Join Our Whats app Group Click Below Image

Today Tamil News | Today Tamil News Head Lines | இன்றைய தலைப்பு செய்திகள் 06.12.2020

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

Today Tamil News | Today Tamil News Head Lines | இன்றைய தலைப்பு செய்திகள் 06.12.2020 

 இன்றைய செய்திகள்
6.01.2021(புதன்கிழமை)


🌹மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால்
முதலில் நம் கையிலேயே எப்போதும் இருக்கும் மொபைலையும்,டிவியையும் ஆப் செய்துவிட்டு அருகில் இருக்கும் மனிதர்களுடன் சிரித்து
பேசினாலே போதும்.!
🌹🌹ஒன்றை எதிர்பார்த்து வருவது அன்பல்ல
ஒன்றுமே இல்லாத போது வருவதுதான் உண்மை அன்பு.!!
🌹🌹🌹இதுவரை நடந்ததை யோசிப்பதை விட
இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்.!!!


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏               

         

                                      🎀🎀தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக மாநில அளவிலான 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று 6.01.2021(புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது-பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தகவல்.
🎀PCR பரிசோதனை கட்டணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
🎀🎀சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: இருப்பு பட்டியல் வெளியீடு.
🎀🎀புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துக் கல்லூரிகளும் இன்று முதல் திறப்பு: விதிமுறைகள் வெளியீடு.
🎀🎀சட்டமன்றத் தேர்தல் பணியில் உடல்நிலை சரியில்லாதவரை ஈடுபடுத்தக்கூடாது -ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
(நாளிதழ் செய்தி)
🎀🎀1.31 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 தேர்வில் 6 கேள்விகள் தவறு: தேர்வு எழுதியவர்கள் புகார்
🎀🎀தமிழகத்தில் புதிதாக 2,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் விரைவில் நியமனம். அமைச்சர் விஜயபாஸ்கர்.
🎀🎀தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு
🎀🎀10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
🎀🎀இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ .65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில்  ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என  தகவல் அறியும் சட்டம் மூலம்  பதிலளிக்கப்பட்டுள்ளது.
🎀🎀பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
🎀🎀பள்ளிகள் திறப்பதில் தொடரும் இழுபறி; எதிர்காலத்தை இழக்கும் இளைய தலைமுறை -
சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், மதுக்கடைகள் என, அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறக்காததால், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வியில் பின்தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
🎀🎀ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் விளையாட்டு மானியத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியல்)
🎀🎀வெள்ளை சீருடை அணிய பெருமையாக உள்ளது. சவால்களை எதிர்கொள்ள தயராக உள்ளேன் - இந்திய அணி  வேகப்பந்து வீச்சாளர் ' நடராஜன்'.
🎀🎀இதயத்திற்கு நலமானது என விளம்பரம் செய்தவரே இதய நோயால் பதிப்படைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள்.
கங்குலி நடித்து ஒளிபரப்பாகி வந்த அதானி-வில்மர் நிறுவன எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
🎀🎀நாம் தான் ஜெயிப்போம் என்கிற அதீத நம்பிக்கை வேண்டாம்.
திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்குவதேயே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்
- உதயநிதி ஸ்டாலின்
🎀🎀திமுக கூட்டணி சார்பில் நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்கப்படும் - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்
🎀🎀அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது -  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
🎀🎀பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்; வீட்டில் இருந்தே அவரது உடல்நிலை தினசரி கண்காணிக்கப்படும்
- கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனை
🎀🎀வருகிற 13ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
🎀🎀முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
🎀🎀இந்தியாவில் இருந்து முதல்கட்ட கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முதல் நாடாக மியான்மர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது !
🎀🎀சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு COVID19 தொற்று
மொத்தம் உள்ள 9888 ஊழியர்களில் 8723 பேருக்கு சோதனை
இன்னும் 664 பேரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது.
🎀🎀வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும், தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்; மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி                                 

 🎀🎀வெளிநாட்டு இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் வெளியுறவுத்துறை ஒப்புதல்.
🎀🎀ஜனவரி 28-ம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளித்தற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்தும் அரசாணை வெளியிட்டுள்ளது.
🎀🎀டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
🎀🎀உருமாறிய கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சென்னையில் நான்கு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
🎀🎀கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
🎀🎀கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா பயணத்தை இங்கிலாந்து பிரதமர் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. குடியரசு தின விழா விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
🎀🎀டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கட்டிடம் கட்டும் போது தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
🎀🎀இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க கோருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். கோரிக்கை பரிசீலித்து 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🎀🎀எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகழாண்டில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது
🎀🎀பொங்கல் விடுமுறைக்கு பின், 10,11மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வரும், 8ம் தேதி வரை, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
🎀🎀நாடு முழுவதும் 'கிளாட்' எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இயங்கும் 22 தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியச் சட்டக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை சட்டப் படிப்புகளில் சேர 'கிளாட்' (Common Law Admission Test-CLAT) எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
🎀🎀காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் நிரம்பாத இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே  (ஜனவரி 6) கடைசித் தேதி ஆகும்.
🎀🎀அசாமில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு நாள் தோறும் 100 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில கல்வி துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்
🎀🎀பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                         

       என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,தலைமையாசிரியர்    

  & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

Post a Comment

0 Comments