Join Our Whats app Group Click Below Image

பென்சில் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு போங்க இவ்வளவு விஷயங்கள் இதுல இருக்கா!!?

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

  பென்சில் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு போங்க இவ்வளவு விஷயங்கள் இதுல இருக்கா!!?

https://2.bp.blogspot.com/-GMohysZ4enY/W6cFEzm0QaI/AAAAAAAAisA/rjyT9qUyfDUUFuK1PzsMLRpkuZiZnl3zQCLcBGAs/s640/staedtler_pencil_lead_grades.jpg
ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில்  HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது. கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார்.


நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு  வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து  போய்விட்டது.

முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை.

நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது.
staedtler_pencil_lead_grades

கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின்   அளவு கோல் என புரிந்து கொண்டேன்.


பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள்.  கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது.

இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற  களிமண்ணையும் கிராபைட்டுடன்  கலக்கிறார்கள்.

இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும்.
H என்பது பென்சிலில் இருக்கும்  hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது.

HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள்.


HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.

BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.

1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.

6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.

H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான  நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.

இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால்  வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.
இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.

Post a Comment

0 Comments