Join Our Whats app Group Click Below Image

வெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

  வெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?


ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த செல்போன் இன்று மனிதனின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. கையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன்கள் வெடித்துச் சிதறுவதாக வரும் செய்திகளை பார்க்கும்போது, மனதில் பயம் தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. பேட்டரிகள் வெப்பமடைவ XCதே செல்போன் வெடிப்பதற்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீன வகை ஸ்மார்ட் போன்களில் உள்ள தரமற்ற பேட்டரிகள் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னணி நிறுவனங்களின் தரமான பொருள்களை பயன்படுத்த வேண்டும், தரமற்ற செல்போன்களையோ, சார்ஜர்களையோ பயன்படுத்த வேண்டாம்,

உயர் அல்லது குறைந்த மின்சாரத்தில் செல்போன்களை சார்ஜ் செய்ய வேண்டாம் போன்றவை வல்லுநர்கள் கூறும் அறிவுரைகள். அதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்தினால் பேட்டரி வெப்பம் அடைய வாய்ப்புள்ளது என்றும், தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்தினால் பேட்டரியில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறும் வல்லுநர்கள் ஸ்மார்போன்களை முறையாக பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

 தொழில்நுட்ப வளர்ச்சி தந்த செல்ஃபோன்களால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவில் தீமைகளும், பாதிப்புகளும் இருக்கிறது என்பதே நிதர்சனம். நாம் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையை அறிந்து‌, அதனை முறையாக பராமரிப்பதன் மூலமே பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments